நாகர்கோவில் அக் 21
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீசார் வடசேரி அப்டா மார்க்கெட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்ட வழியாக கேரளாவுக்கு பாறைபொடி கொண்டு வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி போலி பாஸ் தயாரித்து பாறை பொடி கடத்துவது தெரியவந்தது. மேலும் டாரஸ் லாரிக்கு பாதுகாப்பாக மூன்று சொகுசுகாரில் வந்த கொல்லங்கோடு மனோஜ்(32),அம்பலத்துவிளை டார்வின் ராஜ்(31),அவரது தம்பி டார்லின்ராஜ்(21)சித்திரங்கோடு அனீஷ்குமார்(32),காப்பிகாடு ராஜேஷ் (49), கொல்லங்கோடு வினிஷ்ராஜ்(43), கேரளா மாநிலம் செங்கவிளை ரெதீஷ் (41), ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.மேலும் தப்பியோடிய பாலத்துவிளை பகுதியை சேர்ந்த ரிஜோ (30),சுதர்ராஜ், மார்த்தாண்டம் அனீஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.போலீ பாஸ் தயாரித்து லாரியில் பாறை பொடி கடத்திய சம்பவம் நாகர்கோவிலில் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.