திருப்பூர் ஜூலை: 30
ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அதிக மாக பனியன் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ மாணவிகள் கல்லூரி மாணவர்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில்
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை எண். 1921 என்ற கடையை தமிழக அரசு 500 கடைகளைமூடும் பொழுது நெரிசல் மிக்க அந்த பகுதியில் டாஸ்மாக் கடையை மூடி விட்டனர். மீண்டும் அதே இடத்தில் தற்போது டாஸ்மாக் கடை எண். 2309 என்ற எண்ணில் கடந்த ஒரு வாரமாக புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அந்த கடை அடைக்கச்சொல்லி அப்பகுதியின் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பகுதியில் உள்ள பெண்களைப் பார்த்து அந்த கடையின் பார் உரிமையாளர் ஆபாசமான வார்த்தைகளால் பேசி அடித்து நொறுக்கிவிடுவோம், கொன்று விடுவோம் என்று மேற்படி உரிமையாளர் மற்றும் அவரது கடை ஊழியர்களும் மிரட்டினார்கள் . எனவே வரம்பு மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றியும் எங்களை அநாகரீகமாக பேசி வந்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.