மார்ச்:17
தமிழக விவசாய பட்ஜெட் வெறும் வெற்றுக் காகிதம் விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு அக்கறை கிடையாது டாஸ்மாக் ஊழலை மறைக்கவே மும்மொழிக் கொள்கை
மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனைகளை தமிழக முதல்வர் உருவாக்குவதாக பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பு.
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் மிகப்பெரிய அளவில் நடைபெற்று உள்ளதாகவும் ஆயிரம் கோடி ரூபாய் என்பது முதல் கட்ட தகவல் மட்டுமே என்றும் மேலும் இதில் பல பெரிய ஊழல் வெளியாகும் எனவும் டாஸ்மாக் மதுபானம் கொள்முதல், விற்பனை, பணியிட மாற்றம் என அனைத்து நிலைகளிலும் மாபெரும் ஊழல் நடைபெற்று உள்ளதாகவும். இதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பாக வெளிப்படுத்தி வருவதாகவும் மக்கள் அனைவரும் இந்த ஊழல் குறித்து அறியக்கூடாது என தமிழக முதலமைச்சர் மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை பெரிதாக்கி வருவதாகவும் தமிழக அரசின் கடன் சுமை பல மடங்கு உயர்ந்துள்ளதற்கு திமுக அரசின் திட்டம் இல்லாத திறன் அற்ற நிர்வாகமே காரணம் எனவும் தமிழக அரசு நிறுவனங்கள் அனைத்தும் கடும் கடன் சுமையில் சிக்கித் தவித்து வருவதாகவும் விவசாய பட்ஜெட் என்பது வெற்று காகிதம் மட்டுமே எனவும் எந்தவித பயனும் விவசாயிகளுக்கு இதனால் இல்லை எனவும் பாஜக விவசாய அணி தலைவர்
ஜிகே நாகராஜ் தெரிவித்தார். மேலும் நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவருக்கு வரும் கூட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு காரணங்களுக்காக வழங்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்கி இருந்தால் மத்திய அரசு வழங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது எனவும் தெரிவித்தார்.