திண்டுக்கல், ஏப்.22
திண்டுக்கல்லில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை தரீகத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யா சார்பில் நபிகளாரின் திருப்பேர் முத்தமிழ் மூதழ்றிஞர், ஆத்ம ஞான மகான், குத்புஸ் ஸமான் ,ஷம்ஸுல் வுஜுத், ஜமாலிய்யா அஸ்ஸையித் ஹலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமி நாயகம் மௌலானா அவர்களின் 90 -ஆம் ஆண்டு உதய தினமும், அவர்களின் அருள்பேரர் இறையருள் ஞானி குத்புஸ் ஸமான் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் 34 -ஆம் ஆண்டு உதய தினங்களை முன்னிட்டு கொண்டாடும் தரீக்கா ஞான எழுச்சி விழா நிகழ்ச்சி திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள சுவாகத் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சிக்கு ஹாஜி. ஜே.முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மௌலவி அபூபக்கர் யாஸீனி கிராஅத் ஓத மௌலவி ஹாஜாஷரீப் யாஸீனி ஞானப் பாடல்கள் பாட. அப்துல் மஜீத் குரு புகழ் பாடினார். அய்னுல்ஹக் வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் நாதமணி அவர்கள் இறையருட்பா இலக்கியம் என்ற தலைப்பிலும், முனைவர் அ.காதர்பாட்ஷா சிறார் பாடல்கள் ஒரு பார்வை என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
எம்.முகமது அப்துல்லா ஷரியத்தின் காவலர் சங்கைமிகு சேகுநாயகம் என்ற தலைப்பிலும், ஹாஜா ஷரீப் யாஸீனி ஜமாலிய்யா தோட்டத்தின் புதுமலர் யாஸின் அலி நாயகர் என்ற தலைப்பிலும். எஸ். காஜா நஜ்முதீன் இருந்ததும் பூரணம் மலர்ந்ததும் பூரணம் என்ற தலைப்பிலும், ஏ. உமர் பாரூக் ஹக்கிய்யுல் காதிரி வாழ்க்கை தரும் வள்ளலே என்ற தலைப்பிலும், ஜே. நஜ்முதீன் அள்ளக்குறையாத அறிவுக் களஞ்சியம் என்ற தலைப்பிலும், சீனி அப்துல் காதர் ஹக்கிய்யுல் காதிரி வாழ்வே கராமத் – அற்புதம் என்ற தலைப்பிலும் ,ஜே. முகமது சதகத்துல்லா ஹக்கிய்யுல் காதிரி சத்தியத்தின் நாவு என்ற தலைப்பிலும், உரை நிகழ்த்தினார்கள். கஸீத்துல் அஹ்மதிய்யா கஸுதத்துல் அவ்னிய்யா ஓதப்பட்டது.
திண்டுக்கல் சபை வளர்ச்சிக்கு பாடுபட்ட மறைந்த கலீபாக்கள் முரீதுகள் – முரீதாக்களுக்காக ஜமால் முஹம்மது ஆலிம் பாகவி துவா ஓதினார் .இறுதியாக தப்ரூக் வழங்கப்பட்டது . இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் தலைவர் கலீபா ஆலிம் புலவர் அவர்களும்,செயலாளர் சதக்கத்துல்லா அவர்களும்,
எஸ். காஜா நஜ்முதீன் அவர்களும், காஜா யாஸீனி அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர். திருச்சி யாஸீன் அவர்கள் துணிப்பை வழங்கினார்.இந்நிகழ்வின் முடிவில் பி.எம்.ஏ.அசரப்அலி நன்றியுரை வழங்கினார் .