திருப்பத்தூர்:ஜூலை:21, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியான சின்ன எலவம்பட்டியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று தார் சாலை பணியினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லத்தம்பி துவக்கி வைத்தார்.
சின்ன எலவம்பட்டி பொதுமக்கள் பல ஆண்டுளாக தார் சாலை இல்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மேனகா விவேகானந்தனிடம் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தொடர்ச்சியாக கோரிக்கை வைத்ததின் பேரில் சாலை வசதியின் ஏற்படுத்தி தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் மூலமாக தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து போராடியதின் விளைவாக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2024-2025 கீழ் எலவம்பட்டி முதல் சின்ன எலவம்பட்டி சாலை வரை ரூ.74.81 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு பணி உத்தரவு பெறப்பட்டு சாலை பணி மேற்கொள்ள திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட மாவட்ட கவுன்சிலர், கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் K.A. குணசேகரன், ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய துணை சேர்மென் மோகன்குமார், கூடுதல் அரசு வழக்கறிஞர் M.P.ராஜகுமரன், ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன், துணை தலைவர் ஆனந்தன், ஒன்றிய குழு உறுப்பினர் சண்முக பிரியா கமலநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.காளியப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், இராவுத்தம்பட்டி கிளை செயலாளர் தசரதன்,ஊராட்சி எழுத்தர் ராஜேஷ்குமார்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள், நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள் , தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.