மதுரை ஜனவரி 16,
மதுரை மாநகர் காவல் துறை சார்பாக
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை
முன்னிட்டு மதுரை மாநகர் திலகர் திடல் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் திலகர் திடல் காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அழகர் மற்றும் குற்ற பிரிவு ஆய்வாளர் சோபியா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி முன்னிலையில் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை
தொடர்ந்து மாட்டுப்பொங்கல் கொண்டாடும் விதமாக பாரம்பரிய முறையில் செங்கரும்பு மஞ்சள் கொத்து கட்டி சமத்துவ பொங்கல் வைத்து முதலில் பசுமாட்டிற்கு பொங்கல் வழங்கிய பிறகு காவலர்கள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை கூறி தனது அன்பை பரிமாறிக் கொண்டனர்.