மதுரை நவம்பர் 3,
மதுரை மாவட்டம் விளாச்சேரியில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மதுரை மேற்கு வட்டாட்சியர் செந்தாமரைவள்ளி, விளாச்சேரி ஊராட்சி மன்றத்தலைவர் முருகன் ஆகியோர் உடன் உள்ளனர்.