மதுரை நவம்பர் 19,
மதுரையில் தமிழ்நாடு பெண் தொழில் முனைவோர்கள் ஒருங்கிணைந்து தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்தி விலையில் நேரடி விற்பனை மையம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் தங்க மயில் ஜுவல்லரி விஷ்வா நாராயண், தமிழ்நாடு வ உ சி இளைஞர் பேரவை தலைவர் மின்னல் பிள்ளை, மாநில அமைப்பு செயலாளர்
ரமேஷ்குமார், மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா, மாநில கொள்கை பரப்பு செயலாளர் சரவண செல்வம், மற்றும் TWE நிறுவனர், இந்து
(Tamilnadu women Empowerment),
எல்லீஸ் நகர் திமுக பாமா முருகன் கவுன்சிலர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் அனைத்து விதமான சிறு தொழில்களையும் பெண்களுக்கு கற்றுத் தரப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விழாவில் இந்த நிறுவனத்தின் அனைத்து பெண் நிர்வாகிகளும் மற்றும் பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.