திவ.மலை. பிப்ரவரி 23
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் தமிழக கல்வி நீதி ரூபாய் 2152 கோடியை உடனே வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் ஜெகன் தலைமையில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் கலந்து கொண்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி உடனே வழங்க வேண்டும் என கண்டன உரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் சார்பில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மாலினி,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தணிக்கை குழு உறுப்பினர். பாசறை பாபு.,திராவிட கழகம் மாவட்ட தலைவர் மூர்த்தி,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வழக்கறிஞர் மற்றும் மாநில துணை தலைவர் அன்சர் மில்லாத், நண்பர்கள் சங்கம் தலைவர் முருகன்,விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணைச் செயலாளர் தமிழன் நாகராஜன்,
எஸ். டிபிஐ.கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தாக் பாஷா உள்ளிட்ட அமைப்புகள் சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.