வேலூர் மாவட்டம்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவர்கள் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் ரூ.23.50 இலட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் 2, பகுதி நேர நியாய விலைக்கடை தலா ரூ.9.32 இலட்சம் மதிப்பில் 2 புதிய நியாய விலை கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
வேலூர்=27
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவர்கள் இன்று (26.12.2024) வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் இளையநல்லூர் ஊராட்சியில் ரூ.23.50 இலட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ஜங்காலப்பள்ளி மற்றும் வாணிகாட்டூரில் 2 பகுதி நேர நியாய விலைக்கடை மற்றும் மேல்காட்டூர் மற்றும் திகுவப்பள்ளியில் தலா ரூ.9.32 இலட்சம் மதிப்பில் 2 புதிய நியாய விலை கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், அவர்கள் காட்பாடி வட்டம், இளையநல்லூர் ஊராட்சி. ஜங்காலப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 9.32 இலட்சம் மதிப்பில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து காட்பாடி வட்டம். இளையநல்லூர் ஊராட்சியில் தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின்கீழ் ரூ. 23.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து காட்பாடி வட்டம், வாணி காட்டூரில் பகுதி நேர நியாய விலைக்கடை கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
பின்னர் விண்ணம்பள்ளி ஊராட்சி, மேல்காட்டூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 9.32 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து மகிமண்டலம் ஊராட்சி, திகுவப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 9.32 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார். திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண ஐயப்பதுரை, துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சுவாதி,மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், காட்பாடி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் சரவணன்,மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கலைவாணி பாபு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுஜாதா கருணாகரன்,கவிதா மூர்த்தி, மஞ்சுளா சந்திரன், இளையநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதாஞ்சலி குமரேசன், விண்ணம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி முரளி, மகிமண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி, வட்டாட்சியர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.