நாகர்கோவில் மே 29
குமரி மாவட்டம் குளச்சலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது. தமிழக வெற்றி
கழக தலைவர் விஜய் ஆனைக்கினங்க கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சொல்லுக்கினங்க குளச்சல் தொகுதிற்குட்பட்ட குளச்சல் பேருந்து நிலையத்தில் வைத்து ஒரு நாள் மதிய உணவு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியானது மத்திய மாவட்ட தலைவர் ஆற்றூர் சபின் தலைமையில் நடைபெற்றது. இதில் குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் காவலன் அசோக், குமரி மத்திய மாவட் மீணவர் அணி தலைவர் ஜெமிலன், குளச்சல் நகர பொறுப்பாளர் நாகூர் மீரன்,நெய்யூர் பேரூர் தலைவர் மோனிஷ் ராஜ். சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர் மண்டைக்காடு பேரூர் தலைவர் ஸ்ரீபிரபி ரீத்தாபுரம் தலைவர் ராஜூ மற்றும் நகரம் ஒன்றியம் மாவட்ட அணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.