திருப்பத்தூர்:பிப்:26, திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சிவ பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் அன்னதானம் வழங்கினார்கள்.
இந்நிகழ்வானது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வழிகாட்டுதலின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் முனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிவ பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ உபகரணங்கள், போர்வை மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்னதானம் பெற்று சென்றனர்.
இந்நிகழ்வினை தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் அருண்,வினோத், பயாஸ்,கௌதம், நவீன்குமார்,கொடி சௌந்தர்ராஜன் , சாய் பாஷா,வார்டு நிர்வாகிகள் கோபி,ராஜேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.