தஞ்சாவூர் நவ.9
இந்தியாவிலேயே 13 துறைகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த விழாவில் பல்வேறு துறைகளில் சார்பில் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடந்தது.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 17 துறைகளின் சார்பில் 14, ஆயிரத்து525 பயனாளிகளுக்கு ரூபாய் 154 கோடியே 10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
மேலும் ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப் பணித்துறை, வேளாண் விற்பனை துறை சார்பில் ரூபாய் 43 கோடியே 88 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
பொதுப்பணித்துறைசார்பில்
ரூபாய் 28 கோடியே 26 லட்சம் மதிப்பில் 2 பணிகளுக்கும், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் சுற்று சுவர் மற்றும் உள் விளையாட்டு அரங்கம் ரூபாய் 11 கோடியே 91 லட்சம் செலவில் அமைப்பதற்கும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் ரூபாய் 16 கோடியே 35 லட்சம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் எட்டி பார்க்கிறது .மாவட்டம் ஒன்றியம் நகரம் என்று இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தனி நபருக்கும் தேவையான திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்து பார்த்து வழங்கிக் கொண்டு இருக்கிறார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக மகளிர் சுய உதவிக்கு குழுக்களுக்களை தர்மபுரி மாவட்டத்தில் தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார் நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூபாய் 95 ஆயிரத்து 106 கோடி அளவிற்கு வங்கி கடன் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் வழங்கியிருக்கிறார் .அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த மேடை யிலே சுமார்1000 மகளிர் குழுக் களுக்கு ரூபாய் 68 கோடி வங்கி கடன் வழங்கப்படுகிறது
வங்கி கடனை கடன் தொகையாக முதலமைச்சர் ஸ்டாலின் பார்க்க வில்லை. மகளிரின் உழைப்பின் மீதான நம்பிக்கையாக தான் பார்க்கிறார். மகளிர் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை நம்மளுடைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தந்து இருக்கிறார்.
திராவிட மாடல் அரசுக்கு பல்வேறு திசைகளில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. கல்வி சுகாதாரம் நகர்புற மேம்பாடு உள்ளிட்ட 13 துறைகள் இந்தியா விலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது .இதை நான் கூறவில்லை மத்திய அரசு நிதி ஆயோக் பட்டியல் கூறுகிறது. அதேபோல தொழில் துறையிலும் முதலிடத்தில் இருக்கிறது முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தை இந்தியா மட்டுமல்ல உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது
டெல்டா மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க வேண்டும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றன முதல் கட்டமா க தஞ்சை பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்திட தொழில்நுட்ப பூங்காவை அறிவித்தார். சென்னைக்கு வெளியே அறிவிக்கப்பட்ட முதல் தொழில் நுட்பப் பூங்கா தஞ்சாவூர் திறந்து வைத்து வைக்கப்பட்டு ள்ளது .இதன் மூலம் 600 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
செங்கிப்பட்டியில் 172 ஏக்கரில் முதல் தொழில்பூங்கா அமைக்கப் பட உள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் .இத்திட்டங்களை பெறும் உங்களை எல்லாம் பயனாளிகளாக பார்க்காமல் பங்களிப்பாளர்களாக தான் பார்க்கிறோம்.
திராவிட மாடல் அரசின் சாதனை கள் திட்டங்களை உங்களது நண்பர்கள் உற்றார் உறவினர் களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் ஏனென்றால் திராவிட மாடல் அரசின் தூதுவர்கள் நீங்கள் தான் இவ்வாறு அவர் பேசினார்
விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அமைச்சர் கோவி .செழியன் டிஆர்பி ராஜா ,முரசொலி எம்.பி எம்.எல்.ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, அசோக் குமார், ஜவாஹிருல்லா, மேயர்கள் சண். ராமநாதன், சரவணன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, துணைத் தலைவர் முத்து செல்வன் துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி, சுப தமிழழகன், மாவட்ட வருவாய் அலுவலக தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்