சென்னை, செப்டம்பர்-30,
மெரிடியன் மருத்துவமனை, 300 படுக்கைகள் கொண்ட மல்டி-சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. சென்னையில் மருத்துவ பராமரிப்புக்கான விரிவான பன்முக அணுகு முறைகொண்ட மருத்துவமனை, அவசர சிகிச்சை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன், உலக இதய தினத்தை மருத்துவமனை கொண்டாடியது. மேலும், “இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48” திட்டத்தை செயல்படுத்த அனுமதி பெற்றதாக அறிவித்தது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட அவசரகால உயிர் காக்கும் முயற்சி ஆகும். முக்கிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மெரிடியன் மருத்துவமனை, கணிசமான எண்ணிக்கையிலான சாலை விபத்துக்களைக் கண்டுள்ளது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
மெரிடியன் மருத்துவமனை, வடசென்னையில் மருத்துவ சிகிச்சைக்கான சிறப்புமிக்க மருத்துவமனை என பெயர் பெற்றுள்ளது. இம்மருத்துவமனை, ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளதோடு, விரைவில் இதய மாற்றுச் சேவையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.