நிலக்கோட்டை,செப்.28:
பெரம்பரூரில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டியில் கலந்துகொள்ள செல்லும் தமிழக அணியை வழியனுப்பு விழா சின்னாளப்பட்டியில் நடந்தது.
ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் அசோசியேசன் சார்பில் 11-வயதுக்குட்பட்டோருக்கான ஐந்தாவது தென்னிந்திய ரோல்பால் போட்டிகள் வருகிற சனி,ஞாயிறு கிழமைகளில் பெரம்பலூரில் நடைபெறுகிறது. இதில் தமிழக அணி சார்பில் விளையாட திண்டுக்கல்,மதுரை,கோவை, சென்னை,கோவை,திருச்சி,கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இப்போட்டியில் கலந்து கொள்ளவிருந்த ஆண்கள் பிரிவில் 12 பேரும்,பெண்கள் பிரிவில் 12 பேரும் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று பயிற்சி முடிந்து பெரம்பலுர் சென்ற வீரர் விராங்கனைகளை வழியனுப்பு விழா ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் தென்னிந்திய ரோல்பால் சங்கத்தின் தென்னிந்திய செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு தலைவர் செல்லமுத்து,செயலாளர் கோவிந்தராஜ், துணைத் தலைவரும் சர்வதேச நடுவருமான பிரேம்நாத், பயிற்சியாளர்கள் ராஜசேகர், தங்க மாரியப்பன், கண்மணி, கார்த்திக், தங்கலட்சுமி மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.