திண்டுக்கல் ஆகஸ்ட் :4
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் 11-வது மினி (11வயதுக்குட்பட்ட) தமிழ்நாடு மாநில ரோல் பால் சாம்பியன்ஷிப் 2024 – 2025 போட்டி நேற்று தொடங்கியது.இதில் தமிழ்நாடு மாநில ரோல் பால் சாம்பியன்ஷிப் 2024 – 2025 போட்டியில் 26 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தொழில்நுட்ப தலைவரும், விளையாட்டு தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் துணைத் தலைவரும், திண்டுக்கல் மாவட்ட ரோல் பால் சங்கத்தின் செயலாளருமான மாஸ்டர்
எம்.பிரேம்நாத் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.திண்டுக்கல் மாவட்ட ரோல் பால் சங்கத்தின் தலைவர்
டி.வாஞ்சிநாதன் தலைமை உரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக தென்னிந்திய ரோல் பால் சங்கத்தின் செயலாளர்
எம்.பி.சுப்பிரமணியம் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் தலைவர்
ஜி.சுவாமிநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் விளையாட்டு தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் செயலாளர் சி.கோவிந்தராஜ், விளையாட்டு தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் இணைச் செயலாளர் எஸ்.கண்மணி, ரோல் பால் சங்கத்தின் பயிற்சியாளர் பி.தங்கலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.11-வது மினி (11வயதுக்குட்பட்ட) தமிழ்நாடு மாநில ரோல் பால் சாம்பியன்ஷிப் 2024-2025 போட்டியின் பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியின் முடிவில் தலைமை பயிற்சியாளரும், விளையாட்டு தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் பொருளாளரும், கோயமுத்தூர் ரோல் பால் சங்கத்தின் செயலாளர்
வி.ராஜசேகர் நன்றி கூறினார்.