தஞ்சாவூர் ஜூன் 10
தஞ்சாவூரில் தமிழ்நாடு மாநில குழு சிஐடியு கூட்டம் நடந்தது.அரசியல் சட்டத்தை மதித்து பா.ஜனதா கட்சி ஆட்சிநடத்த வேண்டும் என சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சவுந்தர்ராஜன் கூறினார்.
தஞ்சாவூரில் சிஐடியு தமிழ் மாநில கூட்டம் மாநில தலைவர் சவுந்தர் ராஜன், பொதுச் செயலாளர் சுகுமாரன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, துணை பொது செயலாளர் திருச்செல்வன், மாவட்ட செயலர் ஜெயபால், தலைவர் கண்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிஐ டி யு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், பா. ஜனதா கட்சி ஆட்சி க்கு கடிவாளமாக மாறி இருக்கிறது ஆட்சி செய்த தவறுகளுக்கு தண்ட னையாகவும் ,இந்த தீர்ப்பை நாம் பார்க்கலாம்.
கூட்டணி ஆட்சி என்று அவர்கள் அமைத்த பிறகு ஏற்கனவே தனிப் பெரும்பான்மையாக எடுத்த அரசியல் சட்டவிரோத நடவடிக்கை கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டம் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை மறுப்பு போன்ற பிரச்சனைக ளில் அவர்கள் தங்களுடைய கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
அரசியல் சட்டத்தை மதித்து ஆட்சி நடத்த வேண்டும் .அப்படி நடத்த தவறினால் நிச்சயமாக இந்த பிரச்சினையில் கடுமையான போராட்டத்தை அவர்கள் சந்திக்க வேண்டி இருக்கும். தொழிலாளர் பிரச்சினை, முறைசாரா தொழிலா ளர் பிரச்சினைகள், விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றில் அக்கறை செலுத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினை, ஓய்வு பெற்றவர்களுடைய பஞ்சப்பட்டி பிரச்சினை, மின்சார வாரிய தொழிலாளர்கள் பிரச்சனை, அங்கன்வாடி போன்ற திட்டபணி யாளர்கள் பிரச்சினை என்று ஏராள பிரச்சனைகள் உள்ளன.இவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.
தஞ்சை மாவட்டத்தை பொருத்த வரை தென்னை நார் என்பது ஒரு மூலப்பொருளாக இருக்கிறது தமிழக அரசு இதற்கான ஒரு தொழிற்சாலை உருவாக்க வேண்டும். இங்கு தொழிற்சாலை அமைப்பதால் பலருக்கு வேலை வாய்ப்பு வருமானமும் கிடைக்கும்
நல வாரியத்தில் உள்ள 74 லட்சம் உறுப்பினர்கள் உடைய தரவுகள் அழிந்து விட்டன என்று அரசு கூறுவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது .இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதற் கு பொறுப்பானவர்கள் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தை பொருத்தவரையில் பொங்களை முன்னிட்டு போக்கு வரத்து போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு எங்க ளுக்கு கட்டளையிட்டது, தேர்தலு க்கு பிறகு இந்த கோரிக்கைகள் மீது இப்போது தீர்மானத்தை நிறைவேற்றி, மாநில அரசுக்கு அனுப்பி உள்ளோம் .அது சுமுகமாக தீர வேண்டும் என்று விருப்பப்படு கின்றோம் .ஒரு வேலை இல்லாவி ட்டால் அரசுக்கு அழுத்தம் தருகின்ற போராட்டங்களை முன்னெடுப் போம்.
இவ்வாறு அவர் கூறினார்