தமிழக சமத்துவ மக்கள் கட்சி தொடக்க விழா
சென்னை, மாதவரத்தை அடுத்த புழல் கேம்ப் பகுதியில் உள்ள காமராஜர் மாளிகையில்
தமிழக சமத்துவ மக்கள் கட்சி தொடக்க விழா எம்.சந்தனகுமார் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இசிஆர்.ராஜ் வரவேற்புரை
நிகழ்த்தினார்.
எல்.கடற்கரை லிங்கம் எம்.ஏ.ஆண்டனி, ஆர்.எட்ராஜா, கே.சுப்பிரமணி, ஏ.ஆர்.எஸ்.பொன்னரசன், வி.ஜவகர், எஸ்.சிவா, ஜெ.தங்க மாரியப்பன், எம்.ஏ.முகமது கனி, எஸ்.சித்ர கனி, எஸ்.அருள்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எச்.மின்னல் ஸ்டிபன், சிம்ம பேரவை தலைவர் இராவணன் இராமசாமி, சென்னை மாநகர பேப்பர் சங்கத் தலைவர் எஸ்.எம்.தமிழ்செல்வம், தினக்கூலி தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.முருகன், தொழிலதிபர்கள் வில்லிவாக்கம் எம்.சக்திவேல், பொன்னேரி ஆர்.சண்முகவேல், மதுராந்தகம் டி.ராஜேஷ், ஆர்சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், அனைத்து மாவட்டத்திலும் தமிழக சமத்துவ மக்கள் கட்சி கொடி ஏற்றி அடையாள அட்டை வழங்குவது, அனைத்து மாவட்டத்திலும் செயற்குழு கூட்டம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.