தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம் தேனாம்பேட்டை – காமராஜர் அரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள், மண்டலச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் & மாவட்ட செயலாளர்கள் உரையாற்றி 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
“தேவேந்திர குல வேளாளர்” மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம், மும்மொழி கொள்கைக்கு ஆதரவு, சாதிவாரி கணக்கெடுப்பு, மீனவர்கள் பாதுகாப்பு, நியாயமான மக்களவை தொகுதி மறுசீரமைப்பு, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் போன்றவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
2026 ஆம் ஆண்டு வரும் தேர்தலில் மக்கள் விரோத திமுக அரசை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் என்பது உறுதி, வெற்றிப்பாதையில் அயராது உழைப்போம் என உறுதியேற்போம். இவ்வாறு ஜான் பாண்டியன் தெரிவித்தார்