தஞ்சாவூர் மே 27
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பாக தமிழகமக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தங்க குமரவேல் தலைமை தாங்கி னார். இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவா ணன் ,தமிழ்நாடு மக்கள் விடுதலை நிர்வாகிகள் கவி முருகன், பழனி வேல் ,முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் எதிராக செயல்பட்டு வருவதோடு திருவள்ளுவர் உள்ளிட்ட புலவர்களை அவமதித்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் கோஷங்கள், எழுப்பப்பட்டன.