புதுச்சேரி முதல்வரின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டதற்கு புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு தமிழக என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தொடங்கிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தமிழகத்திலும் விரைவுப்படுத்தும் விதமாக தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி முடிவு செய்துள்ளார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட இருப்பதாக புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை கிண்டியில் நன்றி நடைப்பெற்றது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக 5 ஆண்டுகளாக முழு முயற்சிகளை மேற்கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் தமிழக பிரமுகர் கலியன் கந்தசாமி இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கூட்டத்திற்கு பின் என்.ஆர்.காங்கிரஸ் தமிழக பிரமுகர் கலியன் கந்தசாமி, எம்.மருதுபாண்டி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், புதுச்சேரியில் காமராஜர் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கும் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தமிழகத்திலும் கட்சியை வலுப்படுத்தி 2026-ல் போட்டியிட ஒப்புதல் அளித்துள்ளார். இந்ந அறிவிப்புக்கு தமிழக என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.
புதுச்சேரி போல் தமிழகத்திலும் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சியையும் எடுத்து வருகின்றோம்.
தமிழக மக்கள் புதுச்சேரி போல் தமிழகத்திலும் எளிமையான முதல்வரை தான் விரும்புகின்றனர்.அந்தவகையில் என்.ஆர்.காங்கிரஸ் பணி தமிழகத்தில் சிறப்பாக அமையும்.
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி விரைவில் தமிழகம் வருகை தர உள்ளார். அவர் தமிழகம் முழுவதும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களை அனைத்து மாவட்டங்களில் விரைவில் நியமிக்க உள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும், புதுச்சேரி முதல்வருமான என்.ரங்கசாமி உத்தரவின்படி
2026ல் தமிழக சட்டபேரவை தேர்தலை எதிர்கொள்ள தமிழக என்.ஆர்.காங்கிரஸ் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தின் எம்.சி.ராஜேந்திரன், தளபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்