சென்னை, நவ- 04, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க நூற்றாண்டு விழா மற்றும் புதிய சங்க தலைமை அலுவலகம் திறப்பு விழா சென்னை கோபாலபுரத்தில் நடை பெற்றது.
மாநிலத்தலைவர் சோ.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் மாநிலத் துணைத்தலைவர் சே.வசந்தகுமார், மாநில பொதுச் செயலாளர் பத்மராம் ராவ், மாநிலப் பொருளாளர், வை.மணிவண்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள், சங்க பொறுப்பாளார்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் இதில் கலந்து கொண்டனர்.