தஞ்சாவூர் நவ.15
தஞ்சாவூருக்குவந்த தமிழக கவர்னர் ஆர் என் ரவி பெரிய கோவிலுக்கு சென்று வழிபட்டார்
தஞ்சாவூருக்கு கவர்னர் ஆர் என்.ரவி. தனது மகன் ராகுல் ரவியுடன் வந்தார். சுற்றுலா மாளிகையில் தங்கி இருவரும் தஞ்சாவூர் அரண்மனைக்கு சென்றனர் .அங்கு கவர்னருக்கு தஞ்சாவூர் அரண்மனை தேவஸ் தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அவரது குடும்பத்தினர் மங்கல இசை முழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர் பின்னர் அரண்மனை வளாகத்தில் உள்ள சந்திர மௌலிஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டார்
இதையடுத்து அருகிலுள்ள சரஸ்வதி மகால் நூலகத்துக்குச் சென்ற கவர்னரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள பழங்கால ஓலை சுவடிகளை பார்வையிட்டார் மேலும் ஒளி – ஒலி காட்சிக்கூடத் தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைகளை பார்த்தார். மீண்டும் சுற்றுலா மாளிகைக்குச் சென்ற கவர்னர் மாலையில் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சென்றார் அங்கு அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர், உதவி ஆணையர் கவிதா உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்
வராஹி அம்மன், மராட்டா விநாயகர், பெருவுடையார் பெரியநாயகி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார் பின்னர், தாண்டவ மாடியில் மீது ஏறி பார்வையிட்ட அவர் மகா நந்திகேசுவரரை வழிபட்டு சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்டார்
இதை தொடர்ந்து கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்ட சென்றவர் .இவரது வருகையையொட்டி மாநகரில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.