வேலூர் 05
வேலூர்மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், 26.02.2025 அன்று நடைபெற்ற பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கான அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாமில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்ததமிழ்நாடு அரசின் சாதனைவிளக்கபுகைப்படகண்காட்சியினை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தா.மாலதி பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி. அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, பேர்ணாம்பட்டு ஒன்றியக் குழு தலைவர் சித்ரா ஜனார்தனன், பேர்ணாம்பட்டு நகரமன்றத் தலைவர் பிரேமா, நகரமன்ற துணைத் தலைவர் ஆலியார்ஜுபேர் அஹமத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில் குமரன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.