மயிலாடுதுறையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய திமுகவினர்; இந்தி மொழித்திணிப்பு எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மங்கைநல்லூர், செம்பனார்கோவில், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் திமுகவினர் இவ்விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். மங்கைநல்லூரில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முடிவில் அனைவரும் பாஜக அரசின் இந்தி மொழித்திணிப்புக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். செம்பனார்கோவிலில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதேபோல மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை வழக்கறிஞர்கள் இணைந்து கொண்டாடினர்.