சங்கரன்கோவில். ஜூன்.13.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் இந்தியாவை வியந்து பார்க்கும் வகையில் மக்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்கள் மூலம் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் தலைமையில் இந்த நிதியாண்டிற்கான சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் ஜூன் 20ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. எனவே சங்கரன்கோவில் தொகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை இன்று வியாழக்கிழமை ( ஜூன் 13 ம் தேதி) முதல் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் நீதிமன்றம் அருகே அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது snklmlaoffice@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 9080404049 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்துக் கொள்ளலாம் எனவும், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் வலியுறுத்தப்படும்
எனவும் , அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.