தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது அதனடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் ஆட்சி மொழி சட்டவாரம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர்கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று சாலை வழியாக மீண்டும் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு வந்தடைந்தது.
இப்பேரணியில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் திருநெல்வேலி மண்டல தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் சுந்தர், கண்காணிப்பாளர் ஷீலா ஜெபரூபி, தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.