சென்னை ஜூன் 17
சென்னை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை புனித பண்டிகையாக கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது.
இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகள் நாயகத்தின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இறைவனின் கட்டளையை ஏற்று இப்ராஹிம் தனது ஒரே மகனை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் விதமாக இத்தியாகத் திருநாள் அமைந்திருக்கிறது.
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹச் பயணம் பக்ரீத்தின் போது கடைபிடிக்கப்படுகிறது. மேலும்
இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையின் போது புத்தாடை அணிவதும் வாழ்த்து தெரிவிப்பதும் தான தர்மங்கள் வழங்குவதும் மசூதிக்கு செல்வதும் சிறப்புத் தொழுகைகள் நடத்துவதும் உதவிகள் செய்வதும் சிறப்புக்குரியது.
பக்ரீத் பண்டிகையானது இரக்கம் சகோதரத்துவம் நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு ஆகிய முக்கிய அம்சங்களை உணர்த்துவதால் அதனை அனைவரும் கடைபிடிப்போம்
பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நலமுடன் வளமுடன் வாழ தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனத் தெரிவித்துள்ளார்.