மானாமதுரை:பிப்:12
தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அங்காரகுளம் ஸ்ரீ மயூரநாத முருகன் பாம்பன் ஸ்ரீமத்குமரகுருதாச சுவாமி கோவில் தைபூச விழாவை முன்னிட்டு மயூரநாதன் முருகபொருமனுக்கு வஜ்ராயுதத்திற்கு யாககேள்வி நடைபெற்று 13 வகையான சிறப்பு பொருட்கள் பூஜைகள் மற்றும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேகம், ஆரதனை, திபாராதனை நடைப்பெற்றது.
கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பான அன்னாதனம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜை விழாவில் ஸ்ரீ மயூரநாதன் பாம்பன் ஸ்ரீமத்குமரகுருதாச சுவாமிகள் கோயில் அறக்கட்டளை சார்பாக நிர்வாகிகள் எற்படு செய்தனர். மானாமதுரை சுற்றியுள்ள பகுதியில் கிராம பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டடு சைதபூச விழாவில் ஸ்ரீ மயூரநாதன் முருகபொருமன் அருள் பெற்று சென்றனர்.