மதுரை தேனி ரோடு ஜாங்கிட் நகரில் உள்ள எஸ்எஸ் திருமண மஹாலில் மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் உதவி காவல் ஆய்வாளர் T.ரத்தினசாமி அன்புச்செல்வி ஆகியோரின் இல்லத் திருமண விழா மணமக்கள் R.ஸ்ரீராம் M.Tech K.நவீனா BE,MBA ஆகியோரின் திருமண வைபவம் தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் பேரவை S.ஜெயச்சந்திரன், திமுக விவசாய அணி அமைப்பாளர் S.P.ராஜாமணி ஆகியோர் தலைமையில் அதிமுக EX நகர சேர்மன் சேதுராமன் ஆர்த்தி கோல்ட் பேங்க் லயன் K.செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக காவல்துறையினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் உற்றார் உறவினர்கள் பெருமளவில் வருகை புரிந்து மணமக்களை வாழ்த்தினர்.
விழா ஏற்பாடுகளை இரு வீட்டாரும் சிறப்பாக செய்திருந்தனர்.