மதுரை நவம்பர் 14,
மதுரை மாநகராட்சி எக்கோ பார்க் அருகே உள்ள நீச்சல் குளத்தில் நடந்த நீச்சல் போட்டியில் மாவட்டம் வாரியாக போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தலைமையில் மண்டலத் தலைவி புவனேஸ்வரி முன்னிலையில் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தல்லாகுளம் முருகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வாரியாக நீச்சல் போட்டியில் கலந்து கொண்டனர். நிர்வாக பொறுப்பாளர்கள் சிறப்பாக போட்டியை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கினார்கள்.