வேலூர் நறுவீ மருத்துவமனை இல்ல திருமண நிகழ்ச்சியில் 600-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்மற்றும்முதியோர் களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு.
வேலூர்_12
வேலூர் மாவட்டம் ,வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் அனிதா சம்பத் தம்பதியரின் மகன் நிதின் சம்பத்க்கும், சென்னை அடையாறு ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குநர் கே.டி. வெங்கடேசன்லலிதாவெங்கடேசன் தம்பதியரின் மகள் அபிராமிக்கும் சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ளஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் அன்மையில் திருமணம்சிறப்பாகநடைபெற்றது.இத்திருமணவிழாவையொட்டி வேலூர் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் கந்தனேரி பகுதியில் அமைந்துள்ள நறுவீ கன்வென்ஷன் சென்டரில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மணமக்கள் நிதின் சம்பத் – அபிராமி தம்பதி பங்கேற்க, சச்சின் இசை குழுவினரின் புல்லாங்குழல் மற்றும் வீனை கச்சேரியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ள நம்பிக்கை இல்லம், கசம் முதியோர், பாலர் குடும்ப கிராம பன்னை, தாராபடவேடு ஆத்ம சாந்தி முதியோர் இல்லம், அரியூர் ஸ்ரீ சாய் தஞ்சம் முதியோர் இல்லம், வேலப்பாடிவள்ளலார்முதியோர் இல்லம் மற்றும் வேலூர் உதவும் உள்ளங்கள் அமைப்பின் ஆதரவற்றகுழந்தைகள்மற்றும்முதியோர்கள்என600க்கும்மேற்பட்டவர்களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு மற்றும்பரிசுபொருட்களைநறுவீமருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் வழங்கினார்.இது சம்மந்தமாகநறுவீமருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் கூறுகையில்: எனது மகன் நிதின் சம்பத் – அபிராமி திருமணவரவேற்புநிகழ்ச்சியில்ஆதரவற்றகுழந்தைகள் மற்றும் முதியோர்களை தனிப்பட்ட முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் அவர்களை மகிழ்வித்துசிறப்புசெய்யும்வகையில்ஏற்பாடுசெய்யபட்டது. இந்தநிகழ்ச்சியில்ஆதரவற்றகுழந்தைகள்மற்றும்முதியோர்கள்பங்கேற்பதற்க்காகமேற்சொன்னபகுதியிலிருந்து வரும் வகையில் தனி தனி வாகன வசதி செய்யப்பட்டது. எங்கள் குடும்பதிருமணநிகழ்ச்சிகளில்ஆதரவற்றோர்களுக்கு உணவு அளிப்பதை நாங்கள் வெகு காலமாகபின்பற்றிவருகிறோம். மற்றவர்கள் இதை கடைபிடிக்க முன்னோடியாக இருக்கும் வகையில் அதனை செய்து வருகிறோம்.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்பங்கேற்றவர்களை நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் – அனிதா சம்பத் தம்பதியினர், அடையாறு ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குநர்கள்கே.டி.வெங்கடேசன் – லலிதா தம்பதியினர், கே.டி. சீனிவாச ராஜா ஆனந்தி தம்பதியினர் மற்றும் இயக்குநர் விஷ்ணு சங்கர் சுவேதா தம்பதியினர்மற்றும்நண்பர்கள், நறுவீ குழுமத்தினர் வரவேற்று சிறப்பித்தனர்.