சுசீந்திரம்.ஜன.6
சுசீந்திரம் தணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழாவிற்காக நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் கொடியேற்றுடன் விழா துவங்கியது இரண்டாம் திருவிழாவான நேற்று காலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது காலை 8 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சந்திரசேகரர் ஸ்ரீ கௌரி அம்பாள் திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது மூன்றாம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவிதி உலா வரும் நிகழ்ச்சியும் மாலை 5.30 மணிக்கு மண்டகப்படிக்கு சுவாமி எழுந்தருளள் நிகழ்ச்சியும் இரவு 10 மணிக்கு கற்பக விருட்சக வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் இரவு 10:30 மணிக்கு தனது தாய் தந்தையின் விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக கோட்டாறு வலம் புரி விநாயகர் சுப்பிரமணிய சுவாமி வேளிமலை குமாரசாமி ஆகியோர் தனது தாய் தந்தைகளை மூன்று முறை வலம் வந்து கோவிலுக்குள் செல்லும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து பத்து நாட்களும் கலை நிகழ்ச்சிகள் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், அரங்காவல் குழு உறுப்பினர்கள் கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுதனன், கணக்கர் கண்ணன் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.