தஞ்சாவூர்.நவ.11
வ உ சி யின் புகழை எப்போதும் மறக்கடிக்க முடியாது அவரது புகழ் இன்னும் ஓங்கும் என்றார் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி
தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன ( எம் ஐ டி எஸ்) பேராசிரியர் முனைவர் வெங்கடாசலபதி எழுதிய சுதேசி ஸ்டீம் என்ற ஆங்கில நூல் அறிமுக நிகழ்ச்சியை நடைபெற்றது
இதில் நூலாசிரியர் வெங்கடாசலபதி பேசியது:
இந்திய சுதந்திர போராட்டத்தில் மட்டுமல்லாமல், சமூக விடுதலை போராட்டத்திலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மண்டல் கமிஷன் அறிவிப்பு வெளியிடப் பட்ட பிறகு தந்தை பெரியாரை பற்றி வடநாட்டில் ஆங்கில நூல்கள் மூலம் ஏராளமானோர் அறிந்து கொள்ள தொடங்கினர் .இதன் மூலம் தமிழ்நாட்டில் 70 ஆண்டு களுக்கு முன்பே இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்கள் கொண்டு வரப்பட்டது உள்ளிட்ட கருத்துகளை வடநாட்டினர் பரவலாக அறிந்தனர். ஆனால் சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு மறக்கடிக்கப் பட்டு, வடநாட்டினர் தான் அதிக அளவில் பங்களிப்பு செய்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி யுள்ளனர். இந்த கருத்தை உடைக்கும் விதமாக வ உ சி தொடங்கிய கப்பல் நிறுவனம் குறித்து எழுத வேண்டும் என்ற அடிப்படையில் சுதேசி ஸ்டீம் என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டு ள்ளது
இதை படித்து வடநாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா அசந்து விட்டார். இந்த நூல் வெளியிடப்பட்ட பிறகு அனைத்து பத்திரிக்கையிலும் அலைத்தளங் களிலும் மதிப்புரைகள் வந்து விட்டன .இது என்னுடைய பெருமை அல்ல ,அத்தனை பெருமையும் வ உ சி யை சாரும்
எனவே வ உ சி யின் புகழை எப்போதும் மறக்கடிக்க முடியாது அவரது புகழ் இன்னும் ஓங்கும் அதற்கான பணியை நாம் அனைவரும் முன்னெடுப்போம் என்றார் வேங்கடாசலபதி
நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனைப் பேரவை துணைத் தலைவர் பேராசிரியர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் முரசொலி நூல் அறிமுக உரையாற்றினார். மக்கள் சிந்தனைப் பேரவை நிறுவன தலைவர் ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரையாற்றினார்
முன்னதாக பேரவையின் பொதுக்குழு உறுப்பினர் புலவர் கோபாலகிருஷ்ணன் அனைவ ரையும் வரவேற்றார். நிறைவாக பொதுக்குழு உறுப்பினர் கரந்தை ஜெயக்குமார் நன்றி கூறினார்