சுசீந்திரம் ஜன 10
சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் அனுஜன் வயது 28, இவர் ஒரு புகார் மனு தொடர்பாக நாகர்கோவில் அருகே உள்ள சி.டி.எம். புரத்தை சேர்ந்த டிரைவர் சசிகுமார் வயது 47, வீட்டிற்கு சென்று வீட்டின் முன்பு நின்று விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த அவரது தம்பிகள் சுரேஷ் வயது 42, சந்திரன் 40, ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அனுஜனிடம் அவதூறாக பேசியதோடு எதற்கு இங்கு வந்தீர்கள் என தகாத வார்த்தைகளால் பேசி சட்டையை பிடித்து இழுத்தும் அரசு பணியை செய்ய விடாமல் மிரட்டி சென்றனர். இது தொடர்பாக அவர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி விசாரணை நடத்தினார். தொடர்ந்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் சசிகுமார் அவரது சகோதரர்கள் சுரேஷ், சந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.