திருப்பூர் ஜூன்: 21
மாவட்ட ஆட்சியாளர் தா .கிறிஸ்துவராஜ் உத்தரவின் பேரில். உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் அறிவுறுத்தலின்படி. திருப்பூர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்Dr. விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி மற்றும் பாலமுருகன் அடங்கிய குழுவினர் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சமோசா தயாரிக்கும் நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது சுகாதாரமற்ற முறையில் சமோசா தயாரித்த 4 கடைக்காரர்களுக்கு தலா ரூபாய் 1000/ விதம் மொத்தம் ரூபாய் 4000 அபதாரம் விதிக்கப்பட்டது.
மேலும் மேற்படி நாலு கடைக்காரர்களுக்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-கீழ் நோட்டிஸ் வழங்கப்பட்டது.
சமோசா தயாரிக்கும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம்/ பதிவு சான்று உடனடியாக பெற அறிவுறுத்தப்பட்டது.
தரமான காய் கறிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் கெட்டுப்போன வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது சமோசா தயாரிக்கும் இடம் சுத்தமாகவும் தரைத்தளத்தில் இருந்து 1/2 அடி உயரமாக சுத்தமான விரிப்பு மேல் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டது. பணியாளர்கள் நகங்களை வெட்டி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தான் பேண வேண்டும் எனவும் கையுறை, தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. சமோசா தயாரிக்க சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான முறையில் சேகாரம் செய்து வைக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உணவு பொருள் தயாரிக்கும் கூடத்தின் தரைதலங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சமோசா தயாரிக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது எனவும்RUCO திட்டத்தின் கீழ் பயோ டீசல் தயாரிப்புக்காக சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும் உணவின் தரம் சார்ந்த புகார்களை 9444042322 என்ற whatsapp எண்ணில் தெரிவிக்கலாம் அல்லது tn food safety
Consumer complaint app-ல் பதிவேற்றம் செய்ய பொதுமக்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.