தஞ்சாவூர். டிச.7.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்பட்டு வரும் 25 அரசு மற்றும் தனியார் குழந்தைகள் இல்லங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்தில் நடந்தது
இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கி பேசியதாவது:
குழந்தை இல்லங்களில் குழந்தைகளை அனுமதி ஆணை பெற்ற பின் வைத்திருக்க வேண்டும் .குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் பெண் குழந்தைகளுக்கு இரும்பு சத்து மாத்திரை வழங்க வேண்டும் 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவி கள் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் கவனமாக படிக்க இல்ல கண்காணிப்பாளர்கள் கண்காணி க்க வேண்டும்.
குழந்தைகளை பெற்றோர்கள் வாரத்திற்கு ஒருமுறை வந்து பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் இல்லங்களில் சுகாதார சான்று, தீயணைப்பு சான்று ,கட்டிட உறுதி சான்று பதிவு காலாவதி ஆகாமல் புதுப்பிக்க வேண்டும் .குழந்தை இல்லத்தில் பணி புரியும் பணியாளர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் குமார் குழந்தைகள் நல குழு உறுப்பினர் தனஞ்ஜெயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்