அரியலூர், ஏப்ரல் 21
அரியலூர் மாவட்ட நூலக வளாகத்தில் ரூபாய் 22.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சுற்றுச்சுவர் பணியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழக அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த சுற்றுச்சுவர் கட்டுமானம், நூலக வளாகத்தின் பாதுகாப்பையும், வசதியையும் மேம்படுத்தும் வகையில் அமையும் என தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட நூலகத்தில், ரூ.19.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட போட்டித் தேர்வு மாணவ, மாணவியர்களுக்கான பயிற்சி மையத்தினை திறந்து அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.