திருப்பத்தூர்:ஏப்:9, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாவட்ட கவுன்சிலர் , மாவட்ட திட்டக்குழு உறுப்பினர், கந்திலி மந்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாநில அரசு நிறைவேற்றிய மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு எவ்வித உரிமையும் இல்லை என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்தும், அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநருக்கு பதில் முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தர் ஆக்குவதற்கான மசோதா, கால்நடை பல்கலைக்கழக திருத்த மசோதா, மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டம் பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சரை வேந்தர் ஆக்குவதற்கான மசோதா, தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சரை வேந்தர் ஆக்குவதற்கான மசோதா, தமிழ்நாடு வேலன் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் இரண்டாம் திருத்த மசோதா, கால்நடை இரண்டாம் திருத்த மசோதா, மீன்வள பல்கலைக்கழக இரண்டாவது திருத்த மசோதா ஆகிய பத்து மசோதாக்களுக்கு மாநில அரசு நிறைவேற்றிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பை வரவேற்று தமிழ்நாடு முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த அதிரடி உத்தரவினை வரவேற்று கந்திலி மதிய ஒன்றிய திமுகவினர் கொண்டாடி கோஷங்களை எழுப்பி வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கந்திலி திமுக மத்திய ஒன்றிய துணை செயலாளர் வழக்கறிஞர் மாது, மாவட்ட பிரதிநிதி ஆர்வில், கொரட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு அணி சுகுமார், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் குமரேசன், ஆதிதிராவிடர் நலக்குழு பாலு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன், துணை அமைப்பாளர்கள் பிரபாகரன் ,கோபி , ஐயப்பன், ஒன்றிய மாணவரணி விஜய பிரகாஷ், விவசாய அணி ஒன்றிய தலைவர் மதியழகன், ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாணவர் அணி அமைப்பாளர் சுரேஷ், கிளைச் செயலாளர் கள் அசோகன், ஸ்ரீராமன், முருகன், விஜயகுமார்,துரை, அப்பாதுரை மற்றும் திமுக தொண்டர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.