தேனி.
தேனியில் அருந்ததியர் 3 சதவீத உள்ளிட ஒதுக்கீடுசெல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையொட்டி தேனியில் வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழகத்தில் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் தலைமையிலான ஆட்சியின் போது பட்டியல் இன அருந்ததியர் மக்களுக்கு முன்னுரிமைகளான உள்ளிட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும்,பட்டியல் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய சமூகமாக இருக்கும் அருந்ததியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கோரி ஆதித்தமிழர் பேரவை கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராடியதன் விரைவாக நீதி அரசர் ஜனார்த்தனன் அறிக்கை பரிந்துரையின் படி 2009 ல் திமுக தலைவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் பட்டியல் இன அருந்ததியர் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உள்ளிட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழகத்தில் இருக்கும் சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர் அதேசமயம் அருந்ததியர் உள்ளீடு ஒதுக்கீட்டை பாதுகாக்க கோரி ஆதித்தமிழர் பேரவை, சிபிஐஎம் , திமுக, உள்ளிட்ட கட்சிகளும் தங்களையும் மனுதாரராக இணைத்துக் கொண்டு சட்டப் போராட்டம் நடத்தி இன்றைய சூழலில் உச்ச நீதிமன்றம் ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தமிழ்நாட்டில் வழங்கிய பட்டியலின அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீடு செல்லும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து வழங்கிய தீர்ப்பை கொண்டாடும் விதத்தில் அருந்ததிய சமுதாய மக்களும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் தேனியில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இதில் மாவட்ட செயலாளர் நீலக்கனலன், நகர தலைவர் நாச்சியம்மாள் மாவட்ட நிதி செயலாளர் சரிதா, மாவட்ட மாணவரணி தலைவர் சந்துரு,மாவட்ட மாணவரணி செயலாளர் தரன், மகளிர் அணி நிர்வாகிகள், தேனி நகர தலைவர் தனலட்சுமி, துணைத் தலைவர் பிச்சை அம்மாள், நகரச் செயலாளர் தமிழ்ச்செல்வி, துணைச் செயலாளர் பத்மா, நிதி செயலாளர் திவ்யா, செய்தி தொடர்பாளர் ரம்யா, சாந்தி, லதா, காமாட்சி, நித்தியா, பவுன், லலிதா,தொழிலாளர் அணி கண்ணன், மாணவரணி தமிழன் , தொழிலாளர் அணி நாகராஜ், நவீன் ஆகியோர் கலந்து கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடினர்.