கோவை ஆகஸ்ட்:23
சூப்பர் சரவணா ஸ்டோர் அதனது ஆறாவது கிளையை கோவை ஒப்பணக்கார வீதியில் இன்று திறந்துள்ளது. இதனை நிறுவனர் ராஜரத்தினம் திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார்.ஐந்து தளங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் கட்டிடத்தில் ஆடைகள், அணிகலன்கள், அழகு சாதனப் பொருட்கள், ஸ்டேஷனரி, காலணிகள், சமையல் சாதன பொருட்கள், விளையாட்டு சாதனங்கள், உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
திறப்பு விழா பரிசாக நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்கம் பவுனுக்கு 2000 ரூபாய் தள்ளுபடியும் வைரம் ஒரு கேரட்டிற்கு 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் சபாபதி ராஜரத்தினம் சுனிதா சபாபதி இயக்குனர்கள் ரோஷன் ஸ்ரீ ரத்தினம், யோகேஷ் ஸ்ரீ ரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.