வேலூர்=11
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை லட்சுமி திரையரங்கம் அருகில் சன் ஆப்டிகல்ஸ் அண்ட் ஆப்டோமெட்ரி கிளினிக் மற்றும் ஐ ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் சன் ஆப்டிகல்ஸ் அண்ட் ஆப்டோமெட்ரிக் கிளினிக்கில் நடைபெற்றது .முகாமில் கண் எரிச்சல், கண் வலி, கண் தொற்று, நீர் வடிதல், கண் பார்வை குறைபாடு ,கண் புரை, கூம்பு கருவிழி, குழந்தைகள் கண் மருத்துவம், ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர் இதில் விழி ஒளித்திரை பரிசோதகர் பாலாஜி ஐ ஃபவுண்டேஷன் கிருஷ்ணா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.