கீழக்கரை,செப்.12-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 500 பிளாட் பகுதியில் குடியிருந்து வந்த பாண்டிச்சேரியை சேர்ந்த சுபாஷ் (25) என்பவருக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா (19) என்பவருக்கும் 8 மாதங்களுக்கு முன்பு திருமண நடைபெற்றது. திருமணம் முடித்து ஐஸ்வர்யாவை கீழக்கரைக்கு அழைத்து வந்தார் சுபாஷ் அவர் கீழக்கரை ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். ஹோட்டல் முதலாளி வீட்டில் மேல் மாடியில் சுபாஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் சுபாஷ் எப்போதும் போல காலையில் ஹோட்டலுக்கு வேலைக்கு சென்றுள்ளார் . அதை போல் முதலாளி வீட்டில் உள்ளவர்களும் மருத்துவத்திற்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில். முதலாளி தங்கியுள்ள கீழ் வீட்டில் ஐஸ்வர்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலாளியின் மகள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் போது நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகப்பட்டு ஜன்னல் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது ஐஸ்வர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே அக்கம் பக்கத்தினருக்கும் அவரது கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது உடனே கணவன் வந்து கதவை உடைத்து ஐஸ்வர்யா உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இது குறித்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கீழக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.பின்பு திருமணம் ஆகி 8 மாதங்களே ஆனதால் ஐஸ்வர்யா உடலை பிரோத பரிசோதனைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.