கன்னியாகுமரி மாவட்டம் ஏப். 29
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வருடம் தோறும் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் அதுபோல இந்த ஆண்டு சித்திரைத் தெப்ப திருவிழாவிற்காக நேற்றுகாலை 6 மணிக்கு திருமுறை பாராயணம் நடைபெற்றது தொடர்ந்து 9. 40 மணிக்கு கொடிமரத்திற்கு வட்டபள்ளி மடம் டாக்டர் பிரசாத் பூஜைகள் செய்தார் பின்பு ஆதிசேஷன் நம்பூதிரி கொடியேற்றினார் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
இரண்டாம் திருவிழா காலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது பின்னர் 8 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சுவாமி அம்பாள் வாகனப் பவனியும் இரவு 9’30 மணிக்கு சுவாமி அம்பாள் வாகனப் பவுனியும் நடைபெறுகிறது
3ம் திருவிழா அன்றுகாலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் வாகனத்திலும் இரவு 9:30 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்திலும் சுவாமி அம்பாள் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது
4ம்திருவிழா அன்று காலை 8 மணிக்கு பூத வாகனத்திலும் இரவு 9:30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்திலும் சுவாமி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது
5ம் திருவிழா அன்று காலை 5:30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது மாலை 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் உற்சாகமூர்த்திக்கு பால் தயிர் உள்ளிட்ட 16 வகை நறுமணப் பொருட்களால் அஷ்ட அபிஷேகம் நடைபெறுகிறது இரவு 8:30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது
6ம் நாள் திருவிழா அன்று காலை 9 மணிக்கு பூங்கோயில் வாகனத்திலும் இரவு 9:30க்கு இந்திர வாகனத்திலும் 7ம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு பல்லக்கிலும் சுவாமி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது
8 ம்நாள் திருவிழா அன்று காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் 10 மணிக்கு அலங்கார மண்டபத்தில் வைத்து நடராஜர் பெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அஸ்ட்டா அபிஷேகம் நடைபெறுகிறது மாலை 4 மணிக்கு நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு அஷ்ட அபிஷேகம் இரவு 8.30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது
9ம் நாள் திருவிழா அன்று காலை 6 மணிக்கு இந்திரன் வாகனத்தில் சுவாமி அம்பாள் பவனி வரும் நிகழ்ச்சியும் 9:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் பெருமாளை அமர செய்து ரத விதியை ஒருமுறை சுற்றி வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் பவனி வரும் நிகழ்ச்சியும் நல்லிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சியும் நடைபெறுகிறது
10ம் நாள் திருவிழா அன்று காலை 10:30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும் இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் பெருமாள் ஆகியோரை அலங்கரிக்கச் செய்து தெப்பத்தில் வைத்து மூன்று முறை தெப்பக்குளத்தை சுற்றி வரும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது இரவு 12 மணி அளவில் திருஆராட்டு நடைபெறுகிறது
விழா ஏற்பாடுகளை கோயில்களின் இணையானையர் பழனி குமார் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறங்காவல குழு உறுப்பினர்கள் கோயில் மேலாளர் ஆறுமுகதரன் கணக்கர் கண்ணன் மற்றும் தாணுமாலய சுவாமி கோயில் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்