சுசிந்திரம். 12
பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் ஆவணி மாதம் தாணுமாலையசுவாமி கோவில் உட்பிரகாரம் அமைந்துள்ள திருவேங்கட விண்ணவப்பெருமாள் சுவாமிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் அது போல இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்று நிகழ்ச்சி கடந்த 9 ஆம் தேதிநடைபெற்றது மாத்தூர் மட தந்திரி சங்கர நாராயண ரூ. கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து கொடி ஏற்றினார் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது திருவிழாக்களில் காலை மாலை வேளைகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து பெருமாள் ரத வீதியை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறும் அதுபோல நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட கருடவாகனத்தில் பெருமாளை அமர செய்து வலம் வரும் நிகழ்ச்சிநடைபெற்றது வரும் ஒன்பதாம் திருவிழா அன்று மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பர தேரில் பெருமாளை அமரச் செய்து சிறுவர் சிறுமிகள் பக்தர்கள் தேரை ரத வீதியை சுற்றி இழுத்து வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சியும் மறுநாள் ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது