தஞ்சாவூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களின் அனைத்து நலம் சார்ந்த முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்
தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையத்தலைவர் தலைமையில் நடந்தது
தஞ்சாவூர் மார்ச். 20
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் அனைத்து நலம் சார்ந்த முன்னேற்றங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினா ர் .மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தேசிய தூய்மை பணி யாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கள் மற்றும் ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்தை முழுமையாக தங்கு தடை இன்றி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் உடல்நலன் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தி உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.மேலும் பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டத்தில் தூய்மை பணியாளர் களை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் தூய்மை பணியாளர்களு க்கு அரசு வழங்கும் ஊதியம் முழுமையாக சென்றடைகிறதா? என்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் .தூய்மை பணியாளர் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி அவர்களின் கோரிக்கைக ளை நிறைவேற்ற வேண்டும்.
மேலும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கண்ணன் கும்பகோணம் உதவி ஆட்சியர் ஹிருத்யா விஜயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)சரவணன் ,வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்