கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் விநியோக பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றதது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, 2021 2024 நிதியாண்டுகளில் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம், குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், அரசு பள்ளி கட்டிடங்கள் அனைத்து நிலைகளிலும் தூய்மைப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம், அயோத்தியதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், ரூர்பன் மிஷன், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலைகளின் குறுக்கே பாலங்கள் கட்டுமான பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் அமைக்கும் பணிகள், பள்ளி கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள், சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள், ஜல்ஜீவன் மிஷன், துாய்மை பாரத இயக்கம், 15 வது நிதிக்குழு மானிய திட்டம், கனிமநிதி, இலங்கைவாழ் தமிழர்களுக்கு வீடு கட்டுமான பணிகள், நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வீடுகள் கட்டுமான பணிகள், பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், நடைபெற்று வரும் குடிநீர் விநியோக பணிகள் மற்றும் தெருவிளக்கு போன்ற பல்வேறு அடிப்படை திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் 6T60T வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வந்தனா கர்க் ., மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் ஊரக வளர்ச்சி .ராமஜெயம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் .மகாதேவன் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள்