கிருஷ்ணகிரி- ஜூன்-23-கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோதமான மதுவிற்பனை மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, கல்லூரி, உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணிகளை வருவாய்த்துறை, காவல்துறை இணைந்து தீவிர நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், சட்ட விரோத மதுவிற்பனை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, கல்லுலூரி நிர்வாகத்தினர் போதைப்பொருள் தடுப்பு குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
காவல் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், சட்டவிரோத மதுவிற்பனை செய்பவர்கள் மீது வழக்குகள் பதிந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிடப்பட்டது. வருவாய்த்துறை, காவல்துறை 6T60T அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து போதைப்பொருள் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தகவல் தெரியவந்து,
நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், பொதுமக்கள் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் பற்றிய புகார்களை 10581 என்ற 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி மற்றும் வாட்ஸாப்ப் எண்.6374000754 எண்ணில் தெரிவிக்கலாம். அதே போல், போதைப்பொருட்களை கடத்தவோ, வைத்திருப்பதோ, விற்பதோ, உண்டாக்குவதோ, உபயோகப்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும். இக்குற்றத்திற்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மெத்தனால் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மெத்தனால் அனுமதிக்கப்பட்ட இருப்பு அளவு மீறக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அளவு இருப்பு மீறினாலோ அல்லது விதிகளுக்கு முரணாக பயன்படுத்தினாலோ சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் மெத்தனால் உரிமம் ரத்து செய்வதுடன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மெத்தனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும். மெத்தனால் இருப்பு மற்றும் பயன்பாடுகளை சம்மந்தப்பட்ட கோட்ட ஆய அலுவலர்கள், மேற்பார்வை அலுவலர்கள், காவல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார். 6T60T
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் பொது .பி.புஷ்பா, ஓசூர் சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா ., உதவி ஆணையர் ஆயம் .குமரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.