திண்டுக்கல் ஜூலை :26
கோவையில் 17 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவில் ரோல்பால் போட்டி கடந்த 21 – ஆம் தேதி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட அணி சார்பில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டரங்கில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் ரோல்பால் போட்டியில் பங்கேற்றார்கள். அதில் மாவட்ட அணியில் மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு சின்னாளப்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சர்வதேச நடுவரும், பயிற்சியாளருமான மாஸ்டர் எம்.பிரேம்நாத் , பயிற்சியாளர்கள் தங்கலெட்சுமி, கலையரசன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்தினார்கள்.