தாம்பரத்தில் ஆண்டியப்பன் யோகா அகடாமி சார்பில் நடந்த நோவா உலகசாதனை நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து உலகசாதனை படைத்தனர்.
கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டியப்பன் யோகா அகடாமி சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு யோகா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோவா உலக சாதனை நிகழ்வு ஜனவரி 19ம் தேதி காலை நடைப்பெற்றது.
ஆண்டியப்பன் யோகா அகடாமி நிர்வாகிகள் ருக்மணி, ஹேமா தேவி, சுப்பிரமணி, செல்வகனபதி மற்றும் துர்காதேவி ஆகியோர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பல குழுக்களாக
உஸ்ட்ராசனம், வாட்டாயானாசனம்,
விருச்சிகாசனம் ஆகிய யோகாசனங்களை செய்து உலகசாதனை படைத்தனர்.
அதனை தொடர்ந்து 5 தனிநபர்களின் உலகசாதனை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. இதில் ஜெய துர்ஹா என்ற மாணவி 6 அடி உயரத்தில் கயிறு மீது ஏறி 6 நிமிடம் தொடர்ந்து ஏக பாத ராஜ கபோதாசனம் செய்து அசத்தினர். மேலும்
சிறுவர் கவிந்தர் மற்றும் சிறுமி கோஷிகா, லகு வஜ்ராசனத்தையும், முருகவேல் என்ற மாணவர் வாட்டாயானாசனத்தை 30 நிமிடம் செய்து அசத்தினர்.
அதேபோல் ஷம்ரிதா என்ற மாணவி தலைகீழாக பூர்ண தனுராசனத்தை தொடர்ந்து 3 நிமிடம் செய்து காட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த சாதனைகளை நோவா உலகசாதனை நிறுவனத்தின் தலைமை எடிட்டர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து உலக சாதனையாக அங்கீகரித்தனர். அதனை தொடர்ந்து சாதனை படைத்த மாணவிகளுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாராஜன், சபரி அருணா, கலைவாணி, மாமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் உலக சாதனை சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினர்.